தங்கம் சேர விளக்கு ஏற்றும் முறை

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் வீட்டில் பூஜையறையில், பூஜை செய்வதற்கு எல்லாம் தயாராக இருக்கும். ஆகவே நீங்க புதுசா இந்த பூஜைக்காக எந்த வேலையும் தனியாக செய்ய வேண்டாம். நீங்கள் முதலில் செய்ய வேண்டிய ஒரு விஷயம். வாழைப்பூவுக்கு மேலே மடல் இருக்கும் அல்லவா. அது எடுத்து வர வேண்டும். வாழைப்பூக்கும் மேலே சிவப்பு நிறத்தில் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்து உள்ளே இருக்க பூவை நாம சமைத்து சாப்பிடுவோம்.

அந்த சிவப்பு கலர்ல இருக்க அந்த மடல் ஒன்று கட்டாயம் தேவை. வாரம் வாரம் இதை புதுசா தான் நீங்க எடுத்துட்டு வரணும். ஒரு தாம்பூல தட்டில் இந்த வாழைப்பூ மடலை வைத்து, அதன் மேலே கொஞ்சம் கஸ்தூரி மஞ்சளை பரப்பி அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபமேற்றி வைக்க வேண்டும். மகாலட்சுமியை நினைத்து இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மனம் உருகி, உங்கள் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும், தங்கம் சேர வேண்டும், வெள்ளி சேர வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். அடமானத்தில் வைத்த தங்கத்தையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம். தங்கத் தட்டில் விளக்கை ஏற்றும் அளவுக்கு உங்கள் வீட்டில் தங்கம் சேர்ந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை.