கை, கால்களை இழந்த உக்ரைன் மக்கள் மீண்டு எழ சிறகுகள் கொடுக்கும் இந்தியர்
ஷ்யா – உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் இன்று 734வது நாள். பலம் வாய்ந்த ரஷ்யாவை உக்ரைன் எதிர்கொள்வது சாதாரண காரியமல்ல. இந்நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உதவிகள் கிடைத்து வருகின்றன. இருப்பினும் சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளன. போரால் உக்ரைன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உடல்ரீதியாக பாதிப்படைந்து உள்ளனர்.
பலர் தங்களது கை, கால்களை இழந்து விட்டனர். கடந்த பிப்ரவரி 2022ல் இருந்து தற்போது வரை கணக்கில் எடுத்து கொண்டால் 20 ஆயிரம் உக்ரைனியர்கள் தங்களது கை, கால்களை இழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் எஞ்சிய வாழ்க்கையை இப்படியே கழிக்க முடியாது. இழந்த கை, கால்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்யும் வகையில் மருத்துவம் தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்திருக்கிறது. செயற்கை கை, கால்கள் பொருத்தி கொள்ள முடியும்.