எதிரிகள் தொல்லை நீங்க எண்ணெய் பரிகாரம்
எதிரிகள் தொல்லை எதிர்மறை ஆற்றல் நீங்க பரிகாரம் இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் வியாழக்கிழமையில் ராகு காலம் எமகண்டம் தவிர்த்து மற்ற நேரங்களில் இதை செய்யலாம். இதற்கு நீங்கள் கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய் இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் இந்த இரண்டு எண்ணெயும் ஒன்றாக ஊற்றுங்கள். அதிகமாக ஊற்ற வேண்டாம் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்வதால் அன்றைய தினத்துக்கு உகந்த கடவுளான குரு பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதுபோல் நீங்கள் யாரையேனும் உருவாக மானசீகமாக ஏற்று இருந்தால் அவர்களையும் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.