ஆதிக்கம் செலுத்தும் தென் இந்திய கோயில்கள்!
நாட்டில் உள்ள பணக்கார கோயில்களின் பட்டியலில் தென் இந்தியாவில் உள்ள கோயில்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவில் ஏராளமான இந்துக் கோயில்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இந்துக் கடவுள்களை கொண்ட ஏராளமான கோயில்கள் உள்ள நிலையில் சில கோயில்கள் நாடு முழுவதும் பெரும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன. அவற்றில் பணக்காரக் கோயில்கள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பணக்கார கோயில்களின் பட்டியலில் முதல் இடத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். மேலும் தங்களால் இயன்ற அளவுக்கு காணிக்கைகளையும் அளித்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டு தோறும் 4400 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மேலும் 10 டன் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் இந்த கோயிலுக்கு சொத்துக்கள் உள்ளன.