மாநில தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்பு

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகம், தகவல் தொடர்பு துறை தலைவராக பொறுப்பேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அண்மையில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஊடகம், தகவல் தொடர்பு துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.

இந்நிலையில், பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்புத்துறை தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த பதவியில் கோபண்ணா செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக கோபண்ணா, ஸ்வர்ண சேதுராமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்களாக டி. செல்வம், கே. தணிகாசலம், அருள் பெத்தையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.