ஐந்து மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளின் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும் மணல் ஒப்பந்த குவாரிகள் வந்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது
இந்த நிலையில் திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளின் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆதார் அட்டை விவரங்களுடன் ஆஜராகும் படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது
இதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட்டன் மனுவை விசாரணை செய்த ஐகோர்ட் கலெக்டர்களுக்கு சமன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி சம்மனை ரத்து செய்தது