பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து தேர்வுகள்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வகுப்புகளில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்பிற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றன. எனவே மதிப்பெண்கள் அதிகமாக பெற வேண்டும் என தொடர்ந்து ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பொறுத்து பொறுத்து பார்த்த பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் மாநில அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். சமீபத்தில் கர்நாடகா மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவிற்கு அம்மாநில தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள் மேலாண்மை சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதின
மாணவர்கள் தொடர்ந்து பதற்றமான நிலையிலேயே இருப்பர். அதுமட்டுமின்றி விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. தேர்வு அட்டவணையை கையில் வைத்து கொண்டு அவசர அவசரமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் மாணவர்கள் தங்களை திருத்தி கொள்ள நேரம் கிடைப்பதில்லை.
இவை அனைத்தும் உயர் கல்வியில், வேலைவாய்ப்பில் எப்படியாவது போட்டி போட்டு இடம்பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான். ஆனால் அதுவே மன உளைச்சலாக, நெருக்கடியாக மாறிவிடக் கூடாது. ஆரோக்கியமான சூழலில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் சூழலை பள்ளிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.