இன்று ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் காத்திருக்கும் ஜாக்பாட்
கேரளா லாட்டரித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற வின் வின் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கலில் முதல் பரிசான 75 லட்சம் ரூபாய் காயம்குளம் ஏஜென்சிக்கு கிடைத்தது. இன்று ஸ்த்ரீ சக்தி லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற உள்ளது.
கேரள அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக லாட்டரித்துறை என்ற தனித்துறையையும் நிர்வகித்து வருகிறது. இதன்மூலம் வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட் விற்பனையும் குலுக்கலும் நடைபெறுகிறது. அந்த வகையில் திங்கள் கிழமையான நேற்று வின் வின் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது.
இதில் முதல் பரிசான 75 லட்சம் ரூபாயை WJ 734959 என்ற அதிர்ஷ்ட எண் வென்றுள்ளது. இந்த டிக்கெட்டை காயம்குளம் ஏஜென்சி விற்பனை செய்துள்ளது. இந்த டிக்கெட்டை தம்பி மோன் என்ற ஏஜென்ட் விற்பனை செய்துள்ளார். முதல் பரிசுக்கான டிக்கெட்டை விற்பனை செய்துள்ளதன் மூலம் தம்பி மோன் ஏழரை லட்சம் ரூபாயை கமிஷன் தொகையாக பெறுகிறார்.