விளையாட்டின் முக்கியத்துவம்

இன்றைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் நமது பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து கம்ப்யூட்டர் கேம்ஸ், மொபைலில் கேம் விளையாடுவதையே பெரிதும் விரும்புகிறார்கள்.

விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் குழந்தைகளுக்கு மனதில் அதிக வலிமை பிறக்கும். விளையாட்டின் போது ஏற்படக்கூடிய வெற்றி மற்றும் தோல்வியினை சந்திக்கும் போது மன வலிமை அதிகரித்து வாழ்க்கையில் வரக்கூடிய கஷ்டத்தினை சமாளிக்கும் பக்குவம் அவர்களுக்குள் பிறக்கும். குழந்தைகள் அனைவரும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்தினால், உடல் நலம் மட்டுமின்றி மன நலமும் சிறப்பாக இருக்க உதவும்.