ரஷ்யா செல்லும் விஜய்!
வெங்கட்பிரபு இயக்கத்தில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (சுருக்கமாக G.O.A.T.) படத்தில் விஜய் நடித்து வருகிறார். அவருடன், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
யுவன்சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க, வெந்து தணிந்தது காடு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் பிரமாண்டத்தை உயர்த்திக் காட்ட, கதைக்கு தேவையில்லை என்றாலும் வெளிநாடுகளில் சண்டைக் காட்சிகள் வைப்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. விஜய் படத்தின் கதையின் முக்கியமான பகுதி ரஷ்யாவில் நடப்பது போல் எழுதப்பட்டிருப்பதாகவும், சுமார் ஒரு மாதகாலம் இங்கு பாடல், சண்டை மற்றும் வசனக்காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது தயாரிப்பு நிர்வாகிகள் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி பெறும் வேலைகளில் உள்ளனர்.
விளம்பரம்