பாஜக உடன் கைக்கோர்த்த ஜி.கே.வாசன்
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்தது. அதிமுக சார்பில் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி த.மா.கா. கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், ஜி.கே.வாசன் எம்.பி ஆனார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. இந்த கூட்டணியை மீண்டும் ஒட்ட வைப்பதற்காக ஜி.கே.வாசன் கடும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதில் பலனில்லாமல் போனது
இந்நிலையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதா? பாஜக கூட்டணியில் இடம்பெறுவதா? என்ற குழப்பம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழுவை கூட்டிய ஜி.கே.வாசன், யாரோடு கூட்டணி வைக்கலாம் என வாக்குச்சீட்டு மூலம் கேட்டறிந்தார். இதனிடையே, பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஜிகே வாசனை நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறுவதாக அறிவித்தார்.
.கே.வாசன் கூட்டணியை உறுதி செய்ததை அடுத்து, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவரை சந்தித்து பேசினார். இந்நிலையில், பாஜகவுடன் த.மா.கா. கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, எங்கிருந்தாலும் வாழ்க என ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்