ஆனந்த் அம்பானி பிரத்யேக பேட்டி

விலங்குகளை பராமரிப்பதில் இளவயது முதலே மிகுந்த ஈடுபாடு காட்டி வருவதாக, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், ஜாம்நகரில், ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் முன்னெடுப்பில் உருவாகி வருகிறது. இங்கு 200க்கும் அதிகமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் வெகுசிலரே காட்டு விலங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இனங்கள் அழிந்து வரும் நிலையில் விளிம்பு நிலையில் உள்ள விலங்குகளை மீட்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தில்தான் சுமார் 2,500 ஏக்கர் பரப்பில் வந்தாரா’ வனவிலங்கு மையம் அமைக்கப்பட்டது என்றார்.