அலர்ட் கொடுத்த வானிலை மையம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிப்படியாக பனியும் குறைந்து கோடை வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கனமழையாக நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டு முடிவடைந்த நிலையில் பனிக்காலம் தொடங்கி மிதமான பனி பொழிவானது நிலவிவந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் மழை கொட்டிதீர்த்தது. ஆனால் பனிப்பொழிவானது கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்ததுதான் இருந்தது.

மேலும், காற்றானது 18 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது