மணிப்பூர் நிகழ்ந்தகுண்டுவெடிப்பில் ஒருவர்உயிரிழப்பு
மணிப்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.எம். கல்லூரியில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது.
மணிப்பூரின் இம்பாலில் நேற்று(பிப்.23) இரவு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 24 வயதான நபர் உயிரிழந்தார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்
மேலும் அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த நபர் ஒயினம் கெனேகி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நேற்று மதியம் 12.45 மணியளவில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகப் பிரிவை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர்.