பாஜகவில் இணைந்த விஜயதாரணி
விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் விரைவில் அவர் பாஜகவில் இனைவார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
விஜயதாரணி இது குறித்து பேசாவிட்டாலும், மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தார். மோடி தமிழகம் வரும் போது அவர் முன்னிலையில் பாஜகவில் இணைவாரா அல்லது டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைவாரா என்றும் கேள்விகள் எழுந்தன.
அனைத்திற்கும் விடையளிக்கும் வகையில் இன்று அவர் டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இனை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறப்பான திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.