பாகிஸ்தானில் புதிய ஆட்சி எப்போது அமைகிறது
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஆட்சி கட்டிலில் யார் அமரப் போகிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் – பிலாவல் பூட்டோ கட்சிகளின் கூட்டணி கணக்கு இறுதி வடிவம் பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகின. ஆனால் இதுவரை யாரும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதற்கு காரணம் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 169ஐ கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும்.
2024 பொதுத்தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை அந்நாட்டு ராணுவம் மறைமுக ஆதரவு அளித்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி இரண்டாம் இடத்தை (75 இடங்கள்) மட்டுமே பிடித்தது. பாகிஸ்தானில் எப்போதுமே ராணுவத்தின் கை ஓங்கியிருக்கும்.
மக்கள் கட்சியின் (54 இடங்கள்) பிலாவல் பூட்டோ சர்தாரி மற்றும் சிறிய கட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் நவாஸ் ஷெரீப். இவரது கணக்கு தனது சகோதரரும், முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப்பை ஆட்சி மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி விட வேண்டும் என்பது தான்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வரும் மார்ச் 9ஆம் தேதி ஆட்சி அமைக்கப் போவதாக கூறப்படுகிறது. 72 வயதாகும் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆவார் என்கின்றனர். இந்த இடத்தில் நவாஸ் ஷெரீப் ஏன் பிரதமர் ஆகவில்லை என்று கேட்கலாம். ஏற்கனவே மூன்று முறை பிரதமராக இருந்தவர்