துரோகம்! துரோகம்!

3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம்”காங்கிரஸுக்கு துரோகம் செய்த விஜயதாரணியை கன்னியாகுமரி மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் இணைந்தார்.

இந்த நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க; அன்னை சோனியா காந்தி அவர்கள் இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இந்த கட்சி எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்தது. பணி செய்யவில்லை என்றாலும் கட்சியில் பெருமையுடன் வழிநடத்தினோம்.

இந்த நிலையில், விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு‌ பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறி உள்ளார்