தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தல்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தல்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளது.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தின் பெயரை பயன்படுத்தி லாபகரமான பரிசுகள் என்ற வாக்குறுதியுடன் பயனர்களைத் தவறாக வழிநடத்துவதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது? இந்த மோசடியின் செயல் முறையானது, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் போர்வையின் கீழ் கணிசமான தொகையை,( 5000 ரூபாய்) பெறுவதற்கான உறுதிமொழி மற்றும் பிரதமரின் புகைப்படத்துடன் பயனர்களை கவர்ந்திழுக்கிறது. விளம்பரத்தைக் கிளிக் செய்தவுடன், ஸ்கிராட்ச் கார்டைக் கொண்ட ஒரு
எந்தவொரு திட்டம் அல்லது சலுகை தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடும் முன் அதன் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். அதிகாரபூர்வ அரசாங்கத் திட்டங்கள் பொதுவாக பிரத்யேக இணையதளங்கள் அல்லது தகவல்களைப் பரப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட சேனல்களைக் கொண்டிருக்கும்.
நம்பத்தகாத சலுகைகளில் சந்தேகம் கொள்ளுங்கள். முறையான சரிபார்ப்பு அல்லது தகுதி அளவுகோல்கள் இல்லாமல் சட்டபூர்வமான திட்டங்கள் பெரிய தொகைகளை வழங்குவது அரிதாகும்.
நீங்கள் ஏதேனும் மோசடி நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930-ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்” தமிழ்நாடு சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.