கங்குவா டப்பிங் வேலைகளுக்கு மத்தியில் சூர்யா 43 பட வேலையை துவங்கிய நடிப்பின் நாயகன் 

டிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன். இந்த படம் கடந்த 2022ல் வெளியானது. அதன்பிறகு லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரத்திலும், மாதவன் இயக்கி நடித்து தயாரித்த ராக்கெட்ரி படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா நடித்திருப்பார்.

2022க்கு பிறகு சூர்யா கதாநாயகனாக நடித்த எந்த ஒரு படமும் வெளியாகாதது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏக்கத்தை ஏற்படுத்தியது. எனினும் கங்குவா என்கிற மிகப்பெரிய படத்தின் வேலைப்பாடுகளால்தான் இந்த சூழல் என புரிந்துக்கொண்ட சூர்யாவின் ரசிகர்கள் கங்குவா படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா, அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் புதிய படத்தில் இணைகிறார் என்கிற செய்தி இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதோ வந்துவிட்டது சூரியா 43 பட ஷூட்டிங் அப்டேட்