மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இதுவரை ரூ.45 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நேற்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மேயர் பிரியா வெளியிட்டார்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகரமான சென்னையின் பட்ஜெட் வழக்கமாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த மேயர் பிரியா, வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக 82 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னையில் நிலத்திட நீர்மட்டம் உயரும் வகையில், சென்னையில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும், மழைநீர் தேங்குவதை தடுக்க குளங்கள் மற்றும் பூங்காக்களில் ‘ஸ்பான்ச் பார்க்’ அமைக்கப்படும், 200 வார்டு கவுன்சிலர்களுக்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ‘கையடக்க கணினி, அரசு பள்ளிகளை சீரமைப்பது, பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைப்பது, பள்ளி மாணவர்களுக்கு ‘ஷூ’ மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐடி கார்டு, சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்

இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சென்னை மாநகராட்சி கட்டிடத்தின் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. அப்போது கவுன்சிலர்களின் பல்வேறு கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். நகரமைப்பின் நிலைக்குழு தலைவரான திமுகவைச் சேர்ந்த இளைய அருணா, நேற்று விவாதத்தில் பேசும் போது, சென்னையில் மிகப்பெரிய சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லை என்று குற்றம்சாட்டினார். மேலும்தமிழில் பெயர் பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டது போல கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.60 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-municipal-councilors-ward-development-fund-50-lakhs-mayor-priya-good-news-585473.html?story=1

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-municipal-councilors-ward-development-fund-50-lakhs-mayor-priya-good-news-585473.html?story=1

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-municipal-councilors-ward-development-fund-50-lakhs-mayor-priya-good-news-585473.html?story=1