மதுரையில் சாலையோர கடைகள் மீது ரோடு ரோலர் மோதி விபத்து: 2 பைக்குகள், கடைகள் சேதம்
மதுரை: மதுரை மாடக்குளம் பகுதியில் பிரதான இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி தொடர்ந்து கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட சாலையில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ரோடு ரோலர் வாகனத்தை பயன்படுத்தி அங்கு போடப்பட்டிருந்த ஜல்லிகள் மீது ஏறி வரும் போது திடீரென ரோடு ரோலர் தனது கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள இரண்டு கடைகள் மற்றும் பைக் மீது ஏறியதால் பைக்குகள் மற்றும் கடைகள் சேதகமடைந்துள்ளன.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செல்கின்ற போது அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேக் இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்பதை குறித்து இந்த விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.