அநீதி: அஜோய் குமார் பேட்டி

சென்னை: இந்திய ஜனநாயகத்தை பிரதமர் மோடி முடக்கிவிட்டதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

பாஜகவிடம் இருந்து பெண்களை காக்க வேண்டும்: காங்கிரஸ்
பாஜகவிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய தேவை உள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.

மோடி ஆட்சியில் விலைவாசி பல மடங்கு உயர்வு: அஜோய் குமார்
பெட்ரோல் லிட்டர் ரூ.70-ஆக இருந்தபோது பிரதமர் மோடி போராட்டம் நடத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் ரூ.30-க்கு விற்ற பால் தற்போது பல மடங்கு உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகள் சுதந்திரமாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

தமிழ்நாடு வெள்ள பாதிப்புக்கு 1 ரூபாய் கூட தரவில்லை: அஜோய் குமார்
தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

பெரியார் கொள்கை பற்றி பாஜகவினரிடம் கேளுங்கள்: காங்கிரஸ்
பெரியார் கொள்கைகள் பற்றி பதிலளித்த பின் பாஜகவின் கொடியை தமிழ்நாட்டில் ஏற்ற வேண்டும் என மக்கள் கூற வேண்டும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 இடங்களை வெல்லும் என்றார்.

மோடி ஆட்சியில் பட்டியல், பழங்குடியினத்துக்கு அநீதி: அஜோய் குமார்
மோடி ஆட்சியில் பட்டியல், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ராமராஜ்ஜியம் பற்றி பேசும் பிரதமர் மோடி, பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி. மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும், அயோத்தி ராமர் கோயில் விழாவில் சாமானிய மக்கள் ஒருவராவது பங்கேற்றார்களா? என்றும் கேள்வி எழுப்பினார். கோடீஸ்வரர்களும் பிரபலங்களும் மட்டுமே அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்றனர் என்று அஜோய் குமார் தெரிவித்தார்.