விவசாயிகளிடையே என்ன பிரச்சனை?ஆவேசமடைந்த அன்புமணி
நில உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது அரசே அவதூறு பரப்பி அவமானப்படுத்துவதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நிலப்பறிப்பை எதிர்த்து, மண்ணுரிமைக்காக போராடி வரும் தங்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக செய்யாறில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதி விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தங்களைச் சந்திக்க முதலமைச்சர் மறுத்து விட்டதைக் கண்டித்து 10 உழவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டிருக்கின்றனர். உழவர்களுக்கு எதிரான தமிழக அரசின் அடக்குமுறை அதிர்ச்சியளிக்கிறது. மேல்மா உழவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறதுசெய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக தங்களுக்கு சொந்தமான 2700க்கும் கூடுதலான விளை நிலங்கள் அரசால் கையகப்படுத்தப் படவிருப்பதைக் கண்டித்தும், அம்முயற்சியை கைவிட வலியுறுத்தியும் மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் கடந்த 200 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
குறைந்தது 20 உழவர்களையாவது முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வலியுறுத்திய நிலையில், 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக தெரிவித்த காவல்துறை, பின்னர் அவர்களை சந்திக்க முதலமைச்சர் விரும்பவில்லை என்று கூறி அனுமதி மறுத்து விட்டது. அதைக் கண்டித்து தான் மேல்மா கூட்டு சாலையில் காத்திருப்பு போராட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக மேல்மா உழவர்களை அழைத்து பேச வேண்டும்; அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.