போதி தர்மருக்கு காஞ்சியில் நினைவு மண்டபம்

பல்லவ மன்னர் வம்சத்தின் இளவரசர் போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் நினைவு மண்டபம் அமைக்கும் திட்டமும், கருத்தும் தமிழக அரசிடம் இல்லை என அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காஞ்சிபுரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.

காஞ்சிபுரத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணம் செய்து, போதி தர்மர் சீனாவை சென்றடைந்தார் என்பது வரலாற்று தகவலாக கூறப்படுகிறது
போதி தர்மர் சிலை அருகே மேற்கிலிருந்து வந்த புத்தமத துறவி என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது. புத்த மத குருக்களில் கடைசி குரு போதி தர்மர் என்றும் மொத்தம் 28 குருமார்கள் புத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பினார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் தற்காப்பு கலைகள் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் போதி தர்மர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது