பாஜக ஆட்சிக்கு வந்தால். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. அண்ணாமலை வாக்குறுதி!
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குறுதி
நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அப்போது தமிழகத்தில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் ஆட்சி நடக்கும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கிவிட்டு மக்களை அடிமை போல் நடத்துகின்றனர். ஆனால் 8.5 லட்சம் கோடி ரூபாயை மக்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றி அமைத்தவர் பிரதமர் மோடி. ஊழல் இல்லாத அரசாக மத்தியில் 10 ஆண்டு காலம் பாஜக ஆட்சி செய்தது. பாஜகவின் 76 அமைச்சர்களும் நேர்மையானவர்கள்