பள்ளிக்கரணை டூ பரங்கிமலை
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை குழுவினை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அமைந்துள்ள சென்னையில் ஒரே சதுப்பு நிலம் என்றால் அது பள்ளிக்கரணை தான்,. தென் சென்னையின் முக்கியமான நீர் நிலை வடிகால் பகுதியாக திகழழும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மொத்த இந்தியாவிற்குமே பொக்கிசமான பகுதியாகும். உலகின் மிகப்பெரிய நன்னீர் சதுப்பு நில ஏரிகளில் பள்ளிக்கரணையும் ஒன்று.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் பரங்கிமலை அரசு நிலங்களில் மோசடி ஆவண பதிவுகள் நடைபெற்றதாக பெறப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை செய்ய ஐஏஎஸ் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்..
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் தனிநபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், அதனடிப்படையில் பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் தொடர்பாக முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உரிய ஆவணங்களைப் பரிசீலனை செய்தும், தல ஆய்வு மேற்கொண்டும் கண்டறிந்து, முறைகேடான பதிவுகள் இருப்பின் அதற்கு பொறுப்பாகியுள்ள பதிவுத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் குறித்தும் விரிவாக விசாரணை செய்து உண்மை நிலையினைக் கண்டறிந்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அரசுக் கடித எண். 6311429/எச் 1/2023-1, நாள் 20.02.2024.இன் படி சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., தலைமையிலான ஒரு விசாரணை குழுவானது அரசால் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அனுஷியா, சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. S.சரஸ்வதி, வட்டாட்சியர் duning fitreasu திரு.J.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.