சைக்கிள் சின்னம் ஜி கே வாசன் கோரிக்கை

கடந்த 1996-ம் ஆண்டு மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்கு பிறகு தற்போது ஜி.கே.வாசன், தமாகா தலைவராக உள்ளார். இதனிடையே தொடர் தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு போன்ற காரணங்களால், சைக்கிள் சின்னம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, ஜி.கே.வாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.