உயிர்ப்பூட்டிய கிராம சபை.. சபாஷ் வேலூர் “மசிகம்”
வேலூர்
கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 102 மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 150 கிலோ வெள்ளம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.. மொத்தம் 18 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. எனினும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக தெரிகிறது.. பள்ளிகொண்டா பகுதியிலும், இந்த நிலைமை நீடிப்பதாக தெரிகிறது. அத்துடன் கந்தனேரி பகுதியில், 130 ரூபாய்க்கு விற்க வேண்டிய மது பாட்டிலை, கூடுதல் விலைக்கு விற்றதாக பலமுறை புகார்களும் எழுந்துள்ளளன..
அதேபோல, அணைக்காடு பகுதியில், என் கணவர் கள்ளச்சாராயம் குடிச்சே செத்துப்போயிட்டார் என்று கூலித் தொழிலாளியின் மனைவி போலீஸில் அளித்திருந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில், ஒரு ஆறுதல் செய்தி இதே வேலூர் மாவட்டத்திலிருந்து வெளிவந்துள்ளது.. பேரணாம்பட்டு அடுத்துள்ள மசிகம் ஊராட்சி.. இந்த ஊராட்சியை சுற்றிலும் கிட்டத்தட் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்..
இந்த மசிகம் கிராமமானது, பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ளது.. இந்த கிராமத்தின் காப்புக்காட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்துள்ளது.. அதாவது, சாராயத்திற்கு புகழ்பெற்ற கிராமமாக இது விளங்கி உள்ளது.. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை என்றாலே, போலீசார் முதலில் இந்த கிராமத்துக்கு வந்துதான், சோதனையை மேற்கொள்வார்களாம்.. அடிக்கடி இந்த கிராமத்தை சுற்றியே ரோந்துகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.