ஜோதிகாவின் பிறந்தநாள்..

தென்னக சினிமாவின் ஜனரஞ்சக நடிகை ஜோதிகாவின் பிறந்த தினம் இன்று…!

ஜோதிகா…பிறப்பு ஒக்டோபர் 18, 1977, மும்பை.இவர் இந்தியத்
திரைப்பட நடிகை ஆவார்.இவரது
இயற்பெயர் ஜோதிகா ஸதானா. தமிழ், 
தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார். பொதுவான தாய் சீமா, பிறப்புப் பெயர்: ஷமா காஜி.நடிகர் சிவகுமாரின் மகனான நடிகர்
சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் “குஷி”படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் ஜோதிகா.சிறந்த வேடங்களை தேர்வு செய்து நடிக்கும் கொள்கை கொண்டவர் ஜோதிகா.தெனாலி படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் பிரபவுக்கு ரஜினிகாந்த்தடன் நடித்த சந்திரமுகி மிகப் பெரிய வசூலுடன் இமாலய வெற்றி பெற்ற படம்.
இப்படத்தில் கங்கா என்ற மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்தார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சில:

• 2018 – காற்றின் மொழி

• 2015 – 36 வயதினிலே

• 2007 – மொழி

• 2007 – பச்சைக்கிளி முத்துச்சரம்

• 2006 – வேட்டையாடு விளையாடு

• 2006 – சில்லுனு ஒரு காதல்

• 2006 – சரவணா

• 2005 – ஜூன் ஆர்

• 2005 – மாயாவி

• 2005 – சந்திரமுகி

• 2004 – அருள்

• 2004 – பேரழகன்

• 2004 – மன்மதன்

• 2003 – திருமலை

• 2003 – த்ரீ ரோசஸ்

• 2003 – காக்க காக்க

• 2003 – தூள்

• 2003 – பிரியமான தோழி

• 2002 – ராஜா

• 2002 – லிட்டில் ஜான்

• 2002- 123

• 2001 – பூவெல்லாம் உன் வாசம்

• 2001 – டும் டும் டும்

• 2001 – 12 பி

• 2001 – ஸ்டார்

• 2001 – தெனாலி

• 2000 – குஷி

• 2000 – ரிதம்

• 2000 – உயிரிலே கலந்தது

• 2000 – முகவரி

• 2000 – சிநேகிதியே

• 2000 – பூவெல்லாம் கேட்டுப்பார்

• 1999 – வாலி

விருதுகள்:

• சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)

• சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

ஆக்கம்.எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .