பாரதப் பிரதமர் மோடியின் 72-வது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்…

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 17.09.2022 அன்று மாலை 4 மணியளவில் அம்பாசமுத்திரம் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பாக அம்பை சட்டமன்ற பார்வையாளர் கண்ணன் தலைமையில் கல்லிடைக்குறிச்சி 21வது வார்டு இசக்கியம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு சுடலை மாடசாமி கோவிலில் வைத்து மாணவர்களுக்கு சீருடைகளும் பொதுமக்களுக்கு பிரதமர் மோடியின் 5 இலட்சம் மருத்துவ காப்பீடு 100 பயனாளர்களுக்கு அடையாள அட்டை , நலத்திட்ட உதவிகளும் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணைத்தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், பா.ஜ.க வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்தி வழக்கறிஞர் விஜய பாண்டியன்