வரலாற்று சிறப்புமிக்க படைப்பாளர்கள் நூல் வெளியீட்டு விழா…
வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்பாளர்கள் நூல் வெளியீட்டு விழா. பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் மற்றும் ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆதரவில் கடந்த 24 ஆம் தேதி அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க படைப்பாளர்கள் நூல் வெளியீட்டு விழா ஜெர்மனி டோட்முண்ட் நகரத்தில் தமிழர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்நூல் பொதுநல நோக்கோடு செயற்பட்ட படைப்பாளர்களின் விபரங்களை தவறாது பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் படைப்பாளர்கள் என்ற பெயருடன் நூலை உருவாக்கி இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து தமிழர்களையும் கௌரவிக்கும் முகமாக விழாவானது மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது இந்நிகழ்ச்சியினை திட்டமிட்டு செயல்படுத்தி உலகுக்கு வழங்கிய தொகுப்பாசிரியர் சுப்பிரமணியம் பாக்கியநாதன் மற்றும் தமிழில் முருகதாசன் சின்னத்துரை ராஜகருணா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வினை அறிவிப்பாளராக தொகுத்து வழங்கியவர்கள் திரு பாலசுந்தரம் மற்றும் திரு ரமேஷ் அவர்கள் மேலும் அனைத்து புகழ்மிக்க படைப்பாளர்களும் ஒரே மேடையில் இந்நூலை வெளியிட்டு மிகச் சிறப்பு சேர்த்தனர்.மேலும் இந் நிகழ்வின் தொகுப்பு ஆசிரியர்களை தமிழ் உலா நூல் ஆசிரியர் நாட்டிய ஸ்வரலயா. அதிபர் திரு வேலாயுதபிள்ளை ரவீந்திரநாத் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். இதில் நமது தமிழகத்தைச் சார்ந்த டாக்டர் சுகந்தி இரவீந்திரநாத் அவர்களின் பரதநாட்டிய நூல்களும் சிறுகதை நாவல்களில் இடம் பெற்றுள்ளது இவரது கலைப் படைப்புகள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டிற்கு கிடைத்த ஒரு பெருமை என கொள்ளவேண்டும் இந்நூல் வெளிநாட்டு மற்றும் அனைத்துலக நூலகங்களிலும் வரலாற்று பதிவில் வைக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெர்மனியில் எத்தனை எழுத்தாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றாக இந்நூல் திகழும் என்பதில் ஐயமில்லை
செய்தி அன்பரசன் தமிழ்மலர்