காமராஜர் நினைவுச் சின்னம்…

மத்திய ,மாநில அரசுக்கு பொதுமக்களின் சார்பான அன்பான கோரிக்கை

பாமரனும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற வகையில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து பார் போற்றும் தலைவராக மக்களின் இதய சிம்மாசனத்தில் இன்று வரை வீற்றிருக்கும் மாமேதை பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு

சென்னை மெரினா கடற்கரையிலே ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் வருங்கால சந்ததிகளுக்கு அவருடைய அப்பழுக்கில்லாத அரசியல் எளிய வாழ்க்கை முறைகளையும்,
ஏழை எளிய மக்களிடம் அவர் நடந்து கொண்ட பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் அறிய வேண்டும்

இவரைப் போல
நாமும் வாழ வேண்டும்
என்ற உள் உணர்வை தமிழக இளைஞர்கள் தங்கள் வாழ்வின் லட்சியமாக கொள்வதற்கு இது ஒரு பெரும் முயற்சியாக அமையும்
என்ற வகையில்

மத்திய அரசு இந்தியாவின் இரும்பு மனிதன் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகமே பாராட்டும் வண்ணம் சிலையமைத்த சிற்பி நம்முடைய பாரதப் பிரதம மந்திரி அவர்கள்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு அதை போன்ற ஒரு மதிப்பு வாய்ந்த சிலையை சென்னை மெரினா கடற்கரை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு தரப்பட்ட பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது

தமிழக அரசும், இந்திய அரசும் இதற்கு வழிவகை செய்ய வேண்டும்

பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் தமிழகத்தின் சார்பில் இதனை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்

இது நடைபெறும் பட்சத்தில் தமிழகம் மட்டுமில்லாமல்
அகில இந்தியாவும்
பெருமைப்படும்

செய்தி
லயன் வெங்கடேசன்
தலைவர் செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாடு ஜானலிஸ்ட் யூனியன்