வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்…

மண்டல வருமான வரித்துறையில் ரூ.1 லட்சம் கோடி வரி வசூல்; தலைமை ஆணையர் பேச்சு
சென்னை: சென்னை ஆயக்கார் பவானியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர், மேடையில் தமிழில் பேசிய ஆணையர் ரவிச்சந்திரன்,‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களுடைய பங்கு தம்மை வியக்க வைக்கிறது. இந்திய சுதந்திர போராட்டத்தில் 1700களில் நடைபெற்ற பாலீகர் போராட்டம் தான் முதல் போராட்டமாக பார்க்கப்படுகிறதுபுலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், அஞ்சலை, வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் போராட்டமானது மிக முக்கியத்துவம் பெற்றது. சென்னை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி ரூபாயில், ஒரு லட்சம் கோடி ரூபாயை வசூலில் எட்டியுள்ளது. வளர்ச்சி விகிதம் 38 சதவீதமாக உள்ளது. நிகர வரி 42 சதவீதமாக உள்ளது. தேசிய அளவில் சென்னை மண்டல வருமான வரித்துறை அலுவலகம் 5% கூடுதலாக உள்ளது’என்றார்.

செய்தி வேல்முருகன் தமிழ்மலர் மின்னிதழ்