அக்னி சிறகுகள் அறக்கட்டளை உதவி…
திருப்போரூர் : திருக்கழுக்குன்றம் அடுத்து புதுப்பாக்கம் அரசு திராவிட நல பள்ளியில் அக்னி சிறகுகள் அறக்கட்டளை மற்றும் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சார்பிலும் மேஜை நாற்காலிகள் வழங்கப்பட்டது : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்து புதுப்பாக்கம் ஊராட்சி அரசினர் ஆதிதிராவிட நல பள்ளி மற்றும் ஊராட்சி நலப்பள்ளி ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு கொண்டுள்ளது பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் 75 வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அக்னி சிறகுகள் சார்பில் அதிமுக கட்சியின் கவுன்சிலர் ஆதிலட்சுமி கண்ணபிரான் 50 மேசை நாற்காலிகள் மற்றும் 150 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் கல்வி உபகரணங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரான மோகனரங்கன் சாந்தி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது செய்தி வேல்முருகன் தமிழ்மலர் மின்னிதழ்