பத்திரிகையாளர்கள் சார்பில் சுதந்திர தின விழா…

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் 108 வீடு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் 75-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று இன்று காலை 7மணிக்கு கொடியேற்றப்பட்டது விழாவிற்கு ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் சிரஞ்சீவி அனீஸ், திருப்பூர் மாவட்ட தலைமை நிர்வாகிகள் சுதாகர், செல்வராஜ் கார்த்திக் மற்றும் மனசொலி பத்திரிகையாளர் வேலு செல்வம் பிசி சந்திரன் தமிழ்மலர் வீரக்குமார் வணக்கம் தமிழகம் பத்திரிகையாளர் மருதமுத்து, இளங்கோ, இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்று இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்திக்காக தமிழ்மலர் சிறப்பு ஆசிரியர் என் சுதாகர், திருப்பூர்.