சுதந்திர தின பொன்விழா..

75-ம் ஆண்டு இந்திய தேசத்தின் அமுத விழா..

தமிழ்மலர் மின்னிதழ் ஆகஸ்ட் -15
திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மற்றும் ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக 75-ம ஆம் ஆண்டு, இந்திய சுதந்திர தின விழாவினை இன்று ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, காலை 7 மணிக்கு கொண்டாடப்பட்டது.. தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில தலைவர் சிரஞ்சீவி அனீஸ் காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பூமிநாதன், கலைஞன் கலைக்கூடம் கணேஷ் பாண்டியன், கோவிந்தன், திருப்பூர் மாவட்டம் ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக
தலைமை நிர்வாகி என் சுதாகர், செல்வராஜ், வீரராஜ், கார்த்திக், நந்தகுமார், ஜெகதீசன், சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வின் போது
திருப்பூர் மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக தலைவர் சதாசிவம் திருமதி கலைவாணி, கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர்களுடன் திருப்பூர் ஆசை மீடியா நெட்வொர்க் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்

இந்த நிகழ்ச்சியை திருப்பூர் கலைஞன் கலைக்கூடம் நிறுவனர் கணேஷ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்து அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சி இறுதியில் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநிலத் தலைவர் சிரஞ்சீவி அனீஸ் அவர்கள் அனைவரையும் பாராட்டி நன்றியை தெரிவித்தார்.

செய்தி ராகுல் தமிழ்மலர் மின்னிதழ்.