75-ம் ஆண்டு சுதந்திர தின பேரணி..

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று காலை ஏழு மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அருகில் உள்ள பள்ளி வாளகம் வரை, 75-ம் ஆண்டு சுதந்திர தின பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாவட்ட பல்வேறு பத்திரிக்கை துறைகளும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டனர். இதில், திருப்பூரில் இருந்து காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு சார்பாக அதன் மாநில தலைவர் எஸ்.வி .பூமிநாதன், கலைஞன் கலைக்கூடம் கே.பி.கணேசன் பாண்டியன், எ.கோவிந்தசாமி, ஈஸ்வரன், மற்றும் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

செய்தி என் சுதாகர் திருப்பூர்.