கோயிலை சுற்றி சீரமைக்க கோரிக்கை..

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயில் புராதான கோயில் மாசிலா ஈஸ்வர் கொடிவுடையம்மன் ஆலயம் பழைய மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு இன்றைய இந்து அறநிலையத்துடைய கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது இந்த கோயில் பழமையானது தற்பொழுது ஆலய கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் ஊர் மக்களால் தீர்மானிக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்ற நிலையில் ஆலயம் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் கோவில் திருக்குளம் இவைகள் மிகவும் தூய்மை இல்லாத நிலையில் ஆங்காங்கே காணப்படுகிறது அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் அறநிலையில் துறையை சார்ந்த அதிகாரிகளும் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களின் சார்பாக இன்று வைக்கப்பட்டுள்ளது

அதிகாரிகளும் நிர்வாகமும் இதனை பரிசீலனை செய்து அந்த பகுதியை கோவில் குளம் சுற்றியுள்ள முட்பதர்களை உடனடியாக அகற்றப்பட்டு பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு சுகாதார சீர்கேடுகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பது பொதுமக்களின் சார்பான வேண்டுகோள் கோரிக்கை விண்ணப்பம்

செய்தி
லயன் வெங்கடேசன் மாநிலச் செயலாளர் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம்