10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம்..

மணப்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டபேரவைத் தொகுதிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் குறித்து MLA அப்துல் சமது தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் தொலைநோக்கு திட்டத்தில் எழும் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி.
எம்.பழனியாண்டி, குணசீலன். வருவாய் வட்டாச்சியர்கள் கீதாராணி.லெட்சுமி, மணப்பாறை. வையம்பட்டி. மருங்காபுரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள். மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய MLA அப்துல் சமது மணப்பாறை சட்டமன்ற தொகுதி விவசாயம் சார்ந்த பூமி மக்கள் தடையின்றி விவசாயம் செய்திடும் வகையில் கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து கவேரி நீரை பொன்னணியாறு அனை மற்றும் கண்னுத்து அனைகளுக்கு கொண்டு வரும் திட்டம் 10 ஆண்டுகளுக்குள்ளாக செயல்படுத்துவதற்கான ஆலோசனையும் புகழ்பெற்ற மணப்பாறை மாட்டு சந்தையை மேம்படுத்துவதற்கான பணிகளையும் 10 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கபடும் என கூறினார்.
P.பாலு மணப்பாறை செய்தியாளர்