கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாள்..
கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கம், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த வியாபாரிகள் சங்கம், முக்குலத்து புலிகள் கட்சி, திராவிட விடுதலைக் கட்சி கலைஞன் கலைக்கூடம், தாயகம் மக்கள் எழுச்சி அமைப்பு இணைந்து. ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை பெட்ஷீட் இன்னும் பல நலத்திட்ட உதவிகள். மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கே துரைசாமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
தமிழ்மலர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்