வனப்பகுதியில் மான்கள் நடமாட்டம்
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் மான்கள், காட்டுப் பன்றிகள், மயில்கள், குரங்குகள், உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்துகிறது இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மற்றும் மான்கள் தண்ணீர் தேடி கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்து செல்கின்றன.இந்த நிலையில் இன்று கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரில் உள்ள வனப்பகுதியில் மான்கள் கூட்டமாக சுற்றி திரிந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.