அன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது.. டாக்டர் ஹேச்.வி.ஹண்டே
சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹேச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் உண்மையாக வெளிப்படுத்துவதே பத்திரிக்கையாளர்களின் கடமையாகும். அப்படி அவர்கள் பணிபுரியும் போது, எந்த ஒரு தடைகளும் நிபந்தனைகளும் அவர்களுக்கு இருக்கக் கூடாது.
அப்போதுதான் செய்திகள் அனைத்தும் உண்மையாக இருக்கும். நாமும் நாட்டு நடப்பை அப்படியே தெரிந்துகொள்ளலாம்…
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், சில ஆண்டுகளுக்கு முன் தமிழக சட்டமன்றத்தில், அங்கு நடைபெறுகின்ற விவாதங்கள் அனைத்தும் அப்படியே வெளிப்படையாக வெளிவந்ததில்லை. அந்த சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அனைத்து சம்பவங்களும் நேரடியாக நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு சென்றுவிடும் அங்குள்ள ஒரு அரசு அலுவலர் தலைமையில் அனைத்து விவாதங்களும் அங்கு திருத்தப்பட்டு அதன் பிறகுதான் பத்திரிகைகளுக்கு செய்தியாக இவர்கள் அனுப்பி வைப்பார்கள்.
அதன் பிறகுதான் செய்தித்தாள்களிலும் செய்திகள் வெளிவரும்.
அப்படிதான் அன்று பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது என்று நேற்று காலை சென்னை தி நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடைபெற்ற உள்ளாட்சி முரசு காலை நாளிதழில் 13 ஆம் ஆண்டு விழாவில் பேசும்போது, டாக்டர் ஹேச்.வி.ஹண்டே தெரிவித்துள்ளார்.
விழா முடிந்ததும், இவரை சந்தித்து மூத்த பத்திரிக்கையாளர் சிரஞ்சீவி அனீஸ் அவர்களிடம், டாக்டர் ஹேச்.வி.ஹண்டே
கூறியதாவது,
பத்திரிகையாளர்களின் விஷயத்தில் ஒரு கட்சி தலையீட்டால், உண்மையாக வரக்கூடிய செய்திகள் அனைத்தும் தடைபடும்.. அப்படி நடந்த சம்பவத்தை நான் அறிவேன்..
ஆனால்
தற்போது அந்த நிலை இல்லை. பத்திரிகையாளர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள்…
இந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியால் எந்த ஒரு சம்பவங்களையும் மறைக்கப்பட்டு அதற்கு மாறாக செய்திகள் வருவதில்லை. அதுமட்டுமல்ல பத்திரிக்கை செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு முன்பே இணையதளத்தின் செய்திகள் வருகின்றன.. ஆகையால்
இதற்கு இனி எந்த கட்சியும் தலையிட இருக்காது, அப்படி யாருடைய தலையீடும் இல்லாமல் எல்லோரும் சுதந்திரமாக பணிபுரியலாம் என்றார். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் ஊன்று கோலாக இருக்கின்றன பத்திரிகையாளர்களின் சுதந்திரம் என்று பெருமைப்பட கூறினார்.
இவர் ஒரு மூத்த அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அரசியல் வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல இவருடைய பேச்சுத்திறமை அரசியல் பணிகள் சட்டமன்றத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.
இன்று அவருடைய 95 வயதிலும், சுறுசுறுப்பாக புத்தகங்கள் எழுதுவதும் விழா மேடைகளில் கலந்துகொண்டு பேசுவதும், மருத்துவ பணியையும் தொடர்ந்து செய்து அசத்தி வருகிறார்.
நேற்று நடைபெற்ற விழாவில் பத்திரிகையாளர்களுக்கு முழுமையாக சுதந்திரம் கிடைத்து இருக்கிறது என்று பெருமைப்பட கூறினார். இவரின் இந்த கருத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் சிரஞ்சீவி அனீஸ் தமிழ்மலர் மின்னிதழ்.