மோகன்லாலின் 62வது பிறந்த தினம்

இன்று மலையாள சுப்பர் ஸ்டார்  மோகன்லாலின் 62வது பிறந்த தினம்….
21.05.2022…!

இவரின் இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர் .இவர்
21.05.1960இல் கேரள மாநில பத்தனம் திட்டா என்ற ஊரில் பிறந்தார். இவர் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும்,விநியோகஸ்தருமாவார்.இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 5 முறை தேசிய விருதுகளைப் பெற்றவர், இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். மேலும் ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை பிஃலிம்பேர் விருதும் பெற்றிருக்கிறார், இவர் இந்திய திரைப்பட உலகத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் கேர்னல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெற்ற முதல் இந்திய நடிகர் இவரே.மேலும் காலடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்க்ரத பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவடொக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்கான மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவரேயாவார். 
கேரளா மாநிலம், கோழிக்கூடு பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 29, 2018 ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கியது.இந்திய அரசு 2019 ஆண்டில் இருக்கு 
பத்மபூஷண் விருதினை வழங்கி கெளரவித்தது.இவர் மனைவியின் பெயர் சுசித்ரா.இவர் பிரபல நடிகரும்,
தயாரிப்பாளருமான கே.பாலாஜியின்
மகளாவார்.மோகன்லால் கேரளத்திலுள்ள பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் – சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் ‘LP’ பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மொடல் ஸ்கூலில், தனது படிப்பைத் தொடர்ந்தார்.பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான்
திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது; பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார் மேலும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவர் நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது.அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர், அவர்களில் 
ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார் மற்றும் மணியன்பிள்ளராஜு
போன்றவர்கள் மிகவும் பிரபலமான
இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும் உருவெடுத்தார்கள்.
இவர் நடித்த முதல் படமான “திறநோட்டம்”(1978)இப்படம் தணிக்கை பிரச்சனைகள் காரணமாக ஒரு சில இடங்களில் மட்டுமே திரையிடப்பட்டது. 1980 இல் இவர் நடித்த “மஞ்சில் விரிஞ்ச பூக்கள்”அமோக வெற்றி பெற்று மலையாள திரையுலகில் மோகன்லால் பிரபலம் காண வழி கோலியது. இதுவரை 352படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தமிழில் இருவர்,சிறைச்சாலை,
உன்னப் போல் ஒருவன்,காப்பான் போன்ற படங்களில் மோகன்லால் நடித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “ஒரு யாத்ரா மொழி”என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.இவர் நடித்த இமாலய வெற்றிப்படமான”த்ரிஷியம்”தமிழில் கமலஹாசன் நடிப்பில் “பாபநாசமா”க வெளி வந்து வெற்றி கண்டது. மலையாள திரையுலகில் நீண்ட காலமாக சுப்பர் ஸ்டார்களாக திகழ்பவர்கள் மோகன்லாலும்,
மம்முட்டியுமே.62 வயதிலும் இளமை மாறாமல் கட்டுக்கோப்பாக உடலைப் பேணுபவர் மோகன்லால்.

“இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் மோகன்லால்”

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை