தலைவர்கள் வரவேற்பு..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை வரவேற்று திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தினர் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தும் அதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மின்னிதழ் செய்திகளுக்காக ஊத்துக்குளி P.செல்வராஜ்