சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம்

திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு பெரியார் காலனி மாநகராட்சி சார்பில் ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் ஈஸ்வரமூர்த்தி சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர், ஜான்வல்தாரிஸ், வடக்கு மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் சிட்டி வெங்கடாசலம், வர்த்தக அணி அமைப்பாளர் வடுகநாதன், கவுன்சிலர்கள் சகுந்தலா, ராதாகிருஷ்ணன், பிரேமலதா, கோட்டா பாலு, பத்மாவதி, அனுஷ்யா தேவி, உட்பட திமுக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். மின்னிதழ் செய்திகளுக்காக திருப்பூர் ஊத்துக்குளி P. செல்வராஜ்