32-ம் ஆண்டு விழா..
ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் 32-ம் ஆண்டு விழா
1990-ல் ஆரம்பிக்கப்பட்ட ஆசை மீடியா நெட்வொர்க் என்ற நிறுவனம் 2022 ஏப்ரல் மாதத்தில் தனது 32-ம் ஆண்டு விழாவினை
கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் நேற்று காவல் உயர் அதிகாரி ஏசிபி வின்சென்ட், தொழில் அதிபர்கள் ஜெ.எம்.ஜே.வில்சன், செந்தில் மற்றும் சுகந்தி ரவீந்திரநாத் குழுமம் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியின் போது சமூகம், கலை, வாழ்நாள் சாதனையாளர், இளம் மற்றும் சிறந்த தொழிலதிபர்கள் என விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனர் மற்றும் திரைப்பட இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ்
பாடல் எழுதி இசையமைத்த மூஞ்சி மூஞ்சி என்ற யூடியூப் வீடியோ ஆல்பம் பாடல் வெளியிடப்பட்டது.
ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் செய்தியாளராக பணிபுரியும் கொடைக்கானல் ரமேஷ், கேமராமேன் செல்வம், கோடை செல்வம், மற்றும் சென்னை லயன் வெங்கடேசன் வாணியம்பாடி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனம் விரைவில் 6 ஆயிரம் பேர்கள் பங்களிப்புடன் கேரளா இசைக் கலைஞர்களுடன் மாபெரும் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய கோவை மார்ட்டின் குழுமம், பிளாக் தண்டர், கோவை ஜென்னி ரெசிடென்சி, சத்யா நிறுவனம், மற்றும் கோவை ஆர் கோல்ட் ஆகியோர்களுக்கு ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக மனமார்ந்த நன்றியை சிரஞ்சீவி அனீஸ், ராஜா, ரபி, ராகுல், ரகுமான் ஆகியோர் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராகுல் சென்னை.