நேர்மை மனிதர்கள்..

நேர்மையாக இருக்கும் மனிதர்கள்தான் அதிகம்
அடி வாங்குவார்கள்.

இதை நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்திலாவது உணர்ந்திருப்போம்.

நேராக உயரமாக வளரும் மரமே முதலில் வெட்டப்படுகிறது.

ஒரு செயல்
நேர்மை × நேர்மையற்றது என்று எதைக் கொண்டு அளக்கப்படுகிறது?

ஏமாந்திருக்கும் நேரம் பார்த்து மானை புலி வேட்டையாடுகிறது
அது இயற்கை வாழ்வியல் சுழற்சி முறை என்று ஏற்றுக்கொள்ளபட்டது.

அதுவே மனிதரில் பலமான ஒரு உயிர் பலகீனமான ஒரு உயிரை தாக்குவது என்பது சட்டத்திற்கு புறம்பான சமூகவியல் நீதியாகிறது
அதை கடைப்பிடிப்பவர்களே நேர்மையானவர் எனப்படுகிறார்.

இயற்கையின் பரிணாம வளர்ச்சி ஒற்றை அணு ஜீவராசியில் துவங்கி ஆறாவது அறிவு கொண்ட மனித நிலைக்கு மாறியிருந்தாலும் அவன் ஒவ்வொரு அணுவிலும் தற்காப்பு என்பதே முதன்மையாக இருக்கிறது.

அந்த ஆதாரத்தை விடுத்து சமூகவியல் சட்டத்தை ஒருவன் தீவிரமாக மேற்கொள்ளும்போது மக்களால் அவன் தண்டிக்கப் படுகிறான்.

நீதிபதிகூட புற சாட்சியை ஏற்றுதான் தீர்ப்பு வழங்குகிறார் நேர்மையாளரின் மனசாட்சிக்கு விலையில்லை எவ்வளவு உயரம் நேர்மையோ அவ்வளவு ஆழம் கீழ்நோக்கி அடிக்கப்படுவார்கள்.

ஒன்றை கவனித்தீர்களா?

தனக்கு மட்டும் நேர்மையாக இருப்பவர்கள் பெரும்பாலும் சமூகத்தோடு ஒட்டாமல் வாழ்வார்கள்
அவர்களை சமூகம் கண்டு கொள்வதேயில்லை.

ஊர் உலகின் நடுவில் வாழ்ந்த நேர்மையாளர்கள் எல்லோருமே ஆணிகளாகி அடிக்கத்தான் படுகிறார்கள்.

நேர்மை ?

முதலில் நாம் உடலுக்கு மனதிற்கு நாம் நேர்மையாக இருக்கிறோமா?

இருந்திருந்தால்

ஏன் இத்தனை

நோய்கள்,
மனப்போராட்டங்கள்,
விவாகரத்துகள்,
அனாதைகள் மற்றும்
முதியோர் இல்லங்கள்.

நேர்மை என்பது மிருக இயல்பு அது மனிதரின் நீதி சட்டத்திலில்லை
அதனால் எக்காலத்திலும் அடிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

…….

சரி

இப்போ என்ன சொல்ல வரீங்க?

முதலில் அவரவர் உடலுக்கு நேர்மையா இருப்போம்.
1/2 படி உணவும், 1/4 படி நீரும் போதுமென்ற வயிற்றை
தாழிப்பானையாக்கி நிரப்பாமல்
இருக்க கற்றுக் கொள்வோம்….