புறநகரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எப்போது?
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், மருத்துவமனை அமைப்பதற்காக, சென்னை மாநகராட்சிக்கு 33 ஏக்கர் நிலம் தானமாக கிடைத்தும், அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதியில், ஆக்கிரமிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றன. நிலத்தை மீட்டு, தென் சென்னை புறநகர் மக்கள் வசதிக்காக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.