இந்தியாவில் மெல்ல அதிகரிக்கும் கோவிட்!
இந்தியாவில் நேற்று (ஏப்.,17) 1,150 ஆக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 2,183 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,44,280 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,985 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,10,773 ஆனது. தற்போது 11,542 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.