8 பெண்களுக்கு பாலியல் தொல்லை: சிக்கினார் இந்திய டாக்டர்!!

லண்டன்,-பிரிட்டனில், சிகிச்சைக்கு வந்த 48 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட வழக்கில், இந்திய வம்சாவளி டாக்டர் குற்றவாளி என, நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதி யான ஸ்காட்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கிருஷ்ணாசிங், 72, டாக்டராக உள்ளார். இவர் தன்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக, சிகிச்சை பெற்ற பெண் ஒருவர், 2018ல் புகார் அளித்தார்.இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

அப்போது, 1983 – 2018க்கு இடைப்பட்ட காலத்தில், தன்னிடம் சிகிச்சை பெற்ற மேலும் 47 பெண்களிடம், டாக்டர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, டாக்டர் கிருஷ்ணாசிங் கைதானார்.இந்த வழக்கின் விசாரணை, கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவில், அவர் மீதான 54 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

இந்த வழக்கில் டாக்டர் குற்றவாளி என நேற்று முன்தினம் அறிவித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனையை அடுத்த மாதம் வழங்குவதாக கூறியது. தண்டனைக்கு காத்திருக்கும் டாக்டர் கிருஷ்ணா சிங், மருத்துவ சேவைக்காக பிரிட்டன் அரசின் ‘ராயல் மெம்பர்’ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.